LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


பார்ட்டி பட டீஸர் வெளியீடு! Party Teaser!

Posted in forum 'Cinema News'

avatar

User Support

சென்னை: பார்ட்டி பட டீஸரை பார்த்தவர்கள் வெங்கட் பிரபு வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள். வெங்கட் பிரபு படங்களில் கேலி, கிண்டல் தூக்கலாக இருக்கும். இந்நிலையில் அவர் மிர்ச்சி சிவா, ஜெய், ரெஜினா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரை வைத்து எடுத்துள்ள பார்ட்டி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸர் மோடி அறிவிப்புடன் துவங்கி அதே அறிவிப்புடன் முடிகிறது.

பணமதிப்பிழப்பு குறித்து மோடி அறிவிப்பு வெளியிட்டதை டீஸரில் காண்பித்துள்ளார் வெங்கட் பிரபு. இதில் ஏதோ உள்குத்து இருக்கு, வெங்கட் பிரபு அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாது. வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். பாகுபலி படத்தில் கம்பீரமாக வந்த சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் பார்ட்டிக்கு சென்றால் இப்படித் தான் இருக்கும் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

டீஸரில் மிர்ச்சி சிவா வழக்கம் போன்று தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். பாண்ட் எங்கே என்று ஆளாளுக்கு சிவாவிடம் கேட்கிறார்கள்? யாருய்யா அந்த பாண்டு? டீஸரை பார்த்தவர்கள் படம் நிச்சயம் ஜாலியாக இருக்கும் என்று சிலரும், இது என்ன பிட்டு படமா என சிலரும் தெரிவித்துள்ளனர்.

on 13/12/2017, 7:24 pmPost 1
You cannot reply to topics in this forum