போட்டோக்கள் வெளியானதால் அம்பலமான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பொய்கள்

avatar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் தொடர்பாக 3 பெண்கள் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளதோடு, நாடாளுமன்ற விசாரணையை கோரியுள்ளனர். ஜெசிகா லீட்ஸ், சமந்தா ஹோல்வே மற்றும் ரேச்சல் க்ரூக்ஸ் ஆகிய 3 பெண்மணிகள் நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் ஒருமுறை ட்ரம்ப் மீது அழுத்தமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். "16 பெண்களும் மற்றும் டொனால்டு டிரம்பும்" என்ற ஆவணப்படத்தை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது 'பிரேவ் நியூ பிலிம்ஸ்' நிறுவனம். அதே நிறுவனம்தான் இப்பெண்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த மூன்று பெண்களும் டொனால்டு டிரம்ப் மீதான தங்களது குற்றச்சாட்டுகளை தனித்தனியாக வெளியிட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் அக்குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு நடந்த அமெரிக்க அழகி போட்டியின்போது டிரம்ப் தன்னிடமும் தனது சக போட்டியாளர்களிடமும் தவறான முறையில் பார்வையை செலுத்தியதாக ஹோல்வே குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் அனைவரையும் வரிசையாக நிறுத்தினார். என்னை ஒரு இறைச்சி துண்டு போலவே டிரம்ப் பார்த்தார் என்று அப்போது 20 வயதிலிருந்த முன்னாள் வட கரோலினா அழகி கூறினார்.

தற்போது 70 வயதாகும் ஜெசிகா லீட்ஸ், தனக்கு 38 வயதிருக்கும்போது நியூயார்க்குக்கு சென்ற விமானத்தின் முதல் வகுப்பில் டொனால்டு டிரம்ப் அருகே அமர்ந்தபோது அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அப்படியே தன்மீது படுத்து புரண்டதாகவும் பேட்டியில் தெரிவித்தார். டிரம்ப் எவ்வகையான மனிதர் என்பதை வெளிப்படுத்தவேவ இப்போது இதை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரேச்சல் க்ரூக்ஸ் கூறுகையில், எனக்கு 22 வயதிருக்கும்போது டிரம்ப் டவரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை செய்தேன். அங்குள்ள லிப்ட் ஒன்றின் வெளியே ட்ரம்ப் எனது உதட்டில் முத்தமிட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் அமெரிக்காவில் விவாதப் பொருளாகியுள்ளன. இதனிடையே வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது சுமத்தப்பட்ட இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளுக்கு அப்போதே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க மக்கள் தீர்க்கமான வெற்றியை வழங்கியதன் மூலம், அவர்களின் தீர்ப்பை வெளிப்படுத்திவிட்டனர். ரஷ்யாவுடன் இணைந்து சதி நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்தபோது, அதை மறுத்த ட்ரம்ப், அவர்களிடம் வழக்கு தொடுக்குமாறு சவால் விடுத்தார். ஆனால், இதுதொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனிடையே ட்ரம்ப் மீது பாலியல் புகார் கூறிய ஜில் ஹார்த் என்ற பெண்மணியை தான் பார்த்ததே இல்லை என ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால் ஹார்த்துடன் ட்ரம்ப் நிற்கும் இளமை கால புகைப்படம் அமெரிக்க இணையங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

ஜில் ஹார்த் அளித்த பேட்டியில்,தனது காதல் ஜார்ஜ் ஹாரனேவுடன் டின்னர் சாப்பிட்டபோது, டேபிளுக்கு அடியில் கையை விட்டு தனது சதைகளை ட்ரம்ப் பிடித்து மோசமாக நடந்து கொண்டதாகவும், 1997ம் ஆண்டு, தன்னை சுவற்றோடு சேர்த்து தூக்கி, தனது உடல் முழுக்க ட்ரம்ப் கைகளை பரவவிட்டு தடவி ரசித்ததாகவும், இதையடுத்து தனது ஆடையை மேலே தூக்கிவிட முயன்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அந்த பெண்ணை தான் பார்க்கவேயில்லை என ட்ரம்ப் கூறியிருந்தார். இப்போது வைரல் படத்தால் ட்ரம்ப் பதில் பேச முடியால் உள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!