ஆர்.கே நகர் மக்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய இணையதளம் தொடக்கம்!

avatar

சென்னை: ஆர்.கே. நகர் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உள்ளார். ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவருக்கு ஆதரவாக அ.தி.மு.க தலைவர்கள் தொகுதியில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில், இன்று நேதாஜி நகர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர். அப்போது ஆர்.கே நகர் தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது . அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். www.rknagar.in என்கிற அந்த இணையதளம் உடனடியாக செயல்பட்டிற்கு வந்தது.

ஆர்.கே நகர் மக்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு இந்த இணையதளத்தில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். அத்துடன் மக்கள் தங்கள் குறைகளை 9710173306 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். இந்த இணையதளத்தை அதிமுக ஐ.டி. பிரிவு வடிவமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!