தமிழ்ராக்கர்ஸும், கிரிக்கெட் சூதாட்டமும் ஒன்னுதான்.. எப்படி தெரியுமா?

avatar
டெல்லி: கிரிக்கெட் போட்டியில் நடக்கும் சூதாட்டம் குறித்து தனியார் பத்திரிக்கை ஸ்டிங் ஆப்ரேஷன் ஒன்று செய்தது. சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா என்ற இரண்டு சூதாட்ட நபர்கள் இந்த ஆப்ரேஷனில் சூதாட்டம் குறித்த அனைத்து தகவலையும் தெரிவித்தனர். கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டமும், தமிழ்ராக்கர்ஸ் குழுவின் செயல்பாடும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கிறது. கண்டிப்பாக இரண்டிற்கும் பின் ஒரே நபர் இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் இவர்களின் செயல்பாடு ஒன்று போல் இருக்கிறது. முக்கியமாக இவர்களிடத்தில் புழங்கும் பணம், இவர்களை பின்பகுதியில் இருந்து இயக்கும் நபர்கள் என பல விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது.

தொடக்க காலங்களில் தமிழ்ராக்கர்ஸ் குழு படத்தை ரகசியமாக ரிலீஸ் செய்து வந்தது. ஆனால் சமீப நாட்களில் படத்தை இப்போது ரிலீஸ் செய்ய போகிறோம் என வெளிப்படையாக பேஸ்புக்கில் போஸ்ட் செய்துவிட்டு வேலை செய்கின்றனர். அதேபோல் அவர்கள் கூறும் நாளில் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகிவிடுகிறது.

தமிழ்ராக்கர்ஸ் போலவே தற்போது சூதாட்ட கும்பலும் முன்கூட்டியே சூதாட்டம் குறித்த தகவலை தெரிவிக்க தொடங்கி இருக்கிறது. சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா ஆகியோர் சூதாட்டம் குறித்து பேசும் போது 2018 ஐபிஎல்லில் கண்டிப்பாக சூதாட்டம் நடக்கும் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் உலகிலும் சூதாட்டத்திற்கு முன்பே அது குறித்து தகவல் தெரிவிக்கும் வழக்கம் வந்து இருக்கிறது. இன்றைய ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் சூதாட்டம் நடக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் உலகில் நடக்கும் சூதாட்டங்களில் நிறைய இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். வீரர்களுக்கும் சூதாட்டகாரர்களுக்கும் இடையில் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அதேபோல் தமிழ்ராக்கர்ஸ் குழுவுக்கு சினிமாவில் இருக்கும் சிலரே உதவுவதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகவே இரண்டு அமைப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

சூதாட்டம் குறித்து பேசிய அந்த இருவரும் இந்தியாவிலேயே இதில்தான் பணம் அதிகமாக விளையாடுவதாக கூறினார்கள். அதேபோல் சினிமா துறையைவிட தமிழ்ராக்கர்ஸில் அதிக பணம் விளையாடுவதாக பலமுறை குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளது. ஒரு படத்தை முறைகேடாக வெளியிடுவதற்கும், ஒரு வீரர் முறைகேடாக பந்து வீசுவதற்கு இடையில் நிறைய பணம் கைமாறுகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!