ஆர்கே நகரில் இத்தனை கோடீஸ்வர வேட்பாளர்களா?

avatar
சென்னை: ஆர்கே நகர்தொகுதியில் போட்டியிடும் 59 வேட்பாளர்களில் எத்தனை பேருக்கு குற்றப்வின்னணி உள்ளது. அவர்களின் நிதி நிலைமை மற்றும் கல்லி உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. அறப்போர் இயக்கமும், ஜனநாயக சீர்திருத்த சங்கமும் இணைந்து ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் 4 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் அரசியல் கட்சிகள், 8 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் விவரங்களை சேகரித்துள்ளது. இதே போன்று 47 சுயேச்சை வேட்பாளர்களின் சுய வாக்குமூலத்தையும் ஆராய்ந்து வேட்பாளர்கள் வழங்கிய விவரங்கள் அடிப்படையில் அவர்களின் குற்றவியல் பின்னணி, நிதி, கல்வி உள்ளிட்டவற்றை பகுத்தாய்ந்துள்ளனர்.

இந்த முடிவுகளை அறப்போர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது : 59 வேட்பாளர்களில் 4 பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதே போன்று 59 வேட்பாளர்களில் 7 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 82.81 லட்சம் என்றும் அதிகபட்ச சொத்துகள் உடைய வேட்பாளர்களின் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் முதல் இடத்திலும் உள்ளார். அவருக்கு ரூ. 16.03 கோடி சொத்து இருப்பதாக அறப்போர் இயக்கும் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக டிடிவி தினகரன் ரூ. 11.19 கோடி சொத்துடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ரூ. 5.19 கோடி சொத்துடன் 3வது இடத்திலும் உள்ளார்.

அதிக வருமானம் கொண்ட வேட்பாளர்களின் வரிசையையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்து. வருடாந்திர வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் வேட்பாளர்களில் முதல் இடத்தில் டிடிவி. தினகரன் உள்ளார். இவர் தன்னுடைய மனைவி, மற்றும் சார்ந்தோர் மூலம் ஆண்டுக்கு மொத்த வருமானமாக ரூ. 63.46 லட்சம் ஈட்டுகிறார்.

இவருக்கு அடுத்தபடியாக கலைக்கோட்டுதயம் தனது மனைவி, சுயம் மற்றும் சார்ந்தோர் மூலம் ஆண்டுக்கு ரூ. 18.98 லட்சம் வருமானம் பெறுவதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. ஆர்கே நகரில் போட்டியிடும் 59 வேட்பாளர்களில் 36 பேர் தங்களது வருமானத்திற்கான ஆதாரங்களை அறிவிக்கவில்லை.

இதே போன்று 59 வேட்பாளர்களில் 44 பேர் வருமான வரி விவரங்களை அறிவிக்கவும் இல்லை என்று அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஆர்கே நகரில் போட்டியிடும் வேட்பாளர்களில் 47 சதவீதம் பேர் 5 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இடையில் இருப்பதாக கூறியுள்ளனர். எஞ்சியவர்களில் 47 சதவீதம் பேர் பட்டதாரி அல்லது அதற்கு மேல் உள்ள கல்வித் தகுதிஉடையவர்களாக தங்களை அறிவித்துள்ளதாக அறப்போர் இயக்கத்தின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!