6 வயது சிறுவனுக்கு 70 கோடி சம்பளம்

avatar

பொம்மைகள் மீதான குழந்தைகளின் காதல் எல்லை அற்றது. பொம்மைகளை கொடுத்துவிட்டால் நேரம், காலம் போவது தெரியாமல் குழந்தைகள் விளையாடிக் கொண்டே இருக்கும். ஆனால், பொம்மைகளுடன் விளையாடி ஒரு சிறுவன் எழுபது கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
கூகிள், ஃபேஸ்புக்கில் வேலை செய்வோர் பலருக்கு கூட இந்த சம்பளம் கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அமெரிக்காவை சேர்ந்த ரியான் எனும் ஆறு வயது சிறுவன் குளோபல் லிஸ்ட் ஆப் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 2017ல் அதிகமாக சம்பாதிக்கும் யூடியூப் ஸ்டார் என்ற பெருமையை பெற்றுள்ளான். இவனது வேலை என்ன தெரியுமா? தான் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவியூ செய்வது...

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, யூடியூப் பிரபலங்களில் அதிகமாக சம்பாதிக்கும் நபர் இவன் தான். ரியான் 11 மில்லியன் டாலர்கள் யூடியூப் பொம்மைகள் ரிவ்யூ மூலம் சம்பாதிதுள்ளான். இதன் இந்திய மதிப்பு 70 கோடிகளுக்கும் மேலாகும்.

அதிகமாக யூடியூப் மூலம் சம்பாதிக்கும் நபர்கள் பட்டியலில் 11 மில்லியன் டாலர்களுடன் ஆறு வயது சிறுவன் ரியான் உலக அளவில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. இவனுக்கு சொந்தமாக யூடியூப்பில் ரியான் ரிவ்யூ சேனல் என்று இருக்கிறது.

தனது ரியான் ரிவ்யூ சேனல் மூலம் ஒவ்வவொரு பொம்மைக்கும் ரிவ்யூ சொல்லி பதிவிடுகிறான் ரியான். இவனது வீடியோக்களின் முன் தோன்றும் அனிமேஷனே பட்டையைக் கிளப்புகிறது. குழந்தைகளுக்காக புதியதாக வெளிவரும் பொம்மைகளை விளையாடி பார்த்து அதை தனது மழலை குரலில் ரிவ்யூ செய்கிறான் சிறுவன் ரியான்.

ரியானுக்கு பொம்மைகள் என்றால் அவ்வளவு பிரியம். சிறுவர் விளையாடும் பொம்மைகளுக்கு சிறுவனே ரிவ்யூ செய்வது எவ்வளவு அழகு பாருங்கள். இவன் பெரும்பாலும் கார், ட்ரெயின், சூப்பர் ஹீரோஸ், டிஸ்னி பொம்மைகள், பிக்சர் டிஸ்னி கார்கள், டிஸ்னி பிளேன்ஸ் மான்ஸ்டர் டிரக் மற்றும் அட்வன்ச்சர் பொம்மைகளுக்கு ரிவ்யூ செய்கிறான்.

சிறுவன் ரியான் ரிவ்யூ செய்த ஜெயண்ட் எக் சர்ப்ரைஸ் என்ற டிஸ்னி பிக்சர் கார்களின் ரிவ்யூ வீடியோக்கள் மொத்தம் 800 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோக்களின் தொகுப்பு தான் சிறுவன் ரியானை ஒரு யூடியூப் ஸ்டாராக மாற்றியது என கூறுகிறார்கள்.

சிறுவன் ரியானின் ரியான் ரிவ்யூ யூடியூப் சேனல் பத்து மில்லியன் சந்தாதாரர்கள் (Subscribers) கொண்டுள்ளது. இதன் மூலம் லில்லி சிங் எனும் கனடாவை சேர்ந்த தலைசிறந்த காமெடி நடிகரை அதிகமான சந்தாதாரர்கள் கொண்டுள்ளவர் என்ற பெருமை கொண்டிருக்கிறான் சிறுவன் ரியான்.

பெரும்பாலும் சிறுவன் ரியான் பதிவிடும் வீடியோக்கள் 24 மணி நேரத்திற்குள் அரை மில்லியன் (ஐந்து இலட்சம்) வியூஸ் பெற்றுவிடுகிறது. ஓரிரு நாட்களில் யூடியூப் டிரெண்ட் லிஸ்ட்டில் இடம்பெற்று தனது வீடியோக்களுக்கு ஒருசில மில்லியன் பார்வைகளை பெற்றுவிடுகிறான் சிறுவன் ரியான். இவனது பல வீடியோக்கள் யூடியூப்பின் சூப்பர் ஹிட் வீடியோக்களாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்ன தான் இருந்தாலும் அந்த எழுபது கோடியை பார்க்கும் போது சிலருக்கு கண் கலங்கலாம். பரவாயில்ல, கர்சீப் கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள். எல்லாருமே ரியான் ஆகிட முடியுமா? சொல்லுங்க?

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!