ரஜினி அரசியலுக்கு வர 6 மாத காலமாகும். அண்ணன் சத்யநாராயண ராவ்!

avatar

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு 6 மாத காலம் ஆகலாம் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்தார். ஆனால் பாஜகவுடன் சேர வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தான் இப்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்தபோதே அவர் அரசியலுக்கு வருவார் என்ற சமிஞ்சை கொடுத்துவிட்டார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளின் போது கட்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிந்தது. ஆனால் இந்த மாதம் இறுதியிலேயே அவர் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக நமது தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கேற்ப ரஜினிகாந்த் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அடுத்த கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். அப்போது நிச்சயம் ஏதாவது அறிவிப்பு இருக்கும் என்று தெரிகிறது. இந்த சந்திப்பு நிச்சயம் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைய வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார்.

ஆனால் அவர் பாஜகவுடன் சேர வாய்ப்பு இல்லை. அவர் அரசியலுக்கு வர 6 மாத காலம் ஆகலாம் என்றார் சத்யநாராயண ராவ்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!