நாம் எடுக்க வேண்டிய படம்.. பாலிவுட்டில் எடுத்துவிட்டார்கள் - ஹாட்ஸ் ஆப் பாலிவுட்

avatar

சென்னை: பேட்மேன் பட ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த பேட்மேன் நம்ம கோவைக்காரர் அருணாச்சலம் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பாலிவுட் படம் பேட்மேன். படம் குடியரசு தினத்தன்று ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரில் அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் சூப்பர் மேன், பாட்மேன், ஸ்பைடர் மேன் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பேட்மேன் உள்ளார் என்று அமிதாப் வாய்ஸ் கொடுத்துள்ளார். பேட்மேன்(pad man) ட்ரெய்லர் அனைவருக்கும் பிடித்துள்ளது. படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரெய்லர் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நம்ம கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். நாப்கின்கள் வாங்க முடியாமல் பழைய முறைப்படி சுகாதாரம் இல்லாதவற்றை பயன்படுத்திய பெண்களுக்கு அருணாச்சலத்தின் கண்டுபிடிப்பு ஒரு வரப் பிரசாதம். அவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன்.

எதையும் வியாபார நோக்குடன் பார்க்கும் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் அருணாச்சலத்தின் நல்ல எண்ணத்தை பாலிவுட் கண்டுகொண்டு படமாக்கியுள்ளது. நம்ம தமிழ் திரையுலகம் அல்லவா இதை முதலில் செய்திருக்க வேண்டும்?

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்த தமிழர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை படமாக்கப் போவதாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லையே ஐஸ்வர்யா? நாம் விட்டால் மாரியப்பனையும் பாலிவுட் தான் கண்டுகொண்டு படம் எடுத்து கவுரவிக்கும்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!