வேலைக்காரன் படத்தின் நீளம் வெளியீடு

avatar

சென்னை: மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம் 'வேலைக்காரன்'. இந்தப் படத்துக்கு மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகியுள்ளன. 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

அடுத்த வாரத்தில் அரையாண்டு பரீட்சை முடிவதால் வேலைக்காரன் படத்தை குடும்பத்துடன் கொண்டாடக்கூடிய வகையில் ரிலீஸ் செய்கிறார்கள். வேலைக்காரன் படத்திற்கு சென்சாரில் 'யு' சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று வெளிவந்த சென்சார் ரிப்போர்ட் படி இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் (2 hours 39 minutes 41 seconds) ஓடக்கூடிய வகையில் படத்தை உருவாக்கியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், அதிரடியாகச் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

'தனி ஒருவன்' படத்துக்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு விமர்சகர்களிடைய உருவாகியுள்ளது. தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தின் பெருமை பேசும் படமாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது. படத்தின் முன்பதிவு நாளை (ஞாயிறு) முதல் தொடங்குகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!