தொகுப்பாளினியாக களமிறங்கும் சன்னி லியோன்... டிஸ்கவரி டி.ஆர்.பி இனி எகிறும்!

avatar

மும்பை: பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், கடைசியாக டெரா இன்டெசார் என்ற படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து கடைத் திறப்பு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து வருகிறார்.

புத்தாண்டை ஒட்டி பெங்களூரில் மான்யதா பார்க்கில் சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கன்னட அமைப்புகள் சன்னி லியோன் வருகை கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் எனக் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அதனால், சன்னி லியோன் கலந்துகொள்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. டிஸ்கவரி டிவி சேனல் இந்தியில் நடத்தும் இந்த நிகழ்ச்சியை சன்னி லியோன் தொகுத்து வழங்க உள்ளார்.

டிஸ்கவரி ஜீத் சேனலில் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளதாம். இது பற்றி சன்னி லியோன் கூறுகையில், "டிஸ்கவரி ஜீத் சேனலில் பிரபல டிவி நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது என்னை பிரபலப்படுத்திக் கொள்ள இன்னும் உதவிகரமாக இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திராத ரசிகர்களிடம் என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம் இந்த நிகழ்ச்சியை பார்த்திராதவர்களும் இதனை பார்க்க வைக்க முடியும்" எனக் கூறியிருக்கிறார் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!