அந்த விஷயத்தில் என் 'ஃபுல் சப்போர்ட்' டிடிவி தினகரனுக்கே: விஷால்

avatar
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனுக்கு விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய விஷாலின் ஆசை நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில் அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஷால் ட்வீட்டியுள்ளார்.

@VishalKOfficial Wrote:
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மிஸ்டர் டிடிவி தினக்கரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குடிநீரில் சாக்கடை கலப்பது, மீனவர்கள் பிரச்சனை, எழில்நகரில் குப்பை மேடு, வேலையை தொடர மார்க்கெட்டில் பெண்கள் நீர் மற்றும் கழிவறை வசதி கேட்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஆர்.கே. நகரில் உள்ளது.

டிடிவி தினகரன் இந்த பிரச்சனைகளை எல்லாம் விரைவில் தீர்த்து வைப்பார் என நம்புகிறேன். அது போன்ற விஷயங்களில் டிடிவிக்கு என் முழு ஆதரவு உண்டு என விஷால் ட்வீட்டியுள்ளார்.

@BlackyPriyan wrote:உங்க வேட்புமனு'வ நிராகரிக்காம இருந்திருந்தா நீங்க ஜெயிச்சிருப்பீங்க , இந்நேரம் எல்லாரும் உங்களுக்கு வாழ்த்து சொல்லிருப்பாங்க.... ஜஸ்ட் மிஸ் ????

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!