அந்த இரட்டை குழல் துப்பாக்கியில குண்டு இருக்கிறதா? ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு லந்து கொடுக்கும் திவாகரன் மகன்

avatar
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றியால் உற்சாகத்தில் ரொம்பவே மிதந்து கொண்டிருக்கிறது மன்னார்குடி குடும்பம்.. திவாகரன் மகன் ஜெயானந்த், முதல்வர் ஓபிஎஸ், துணை முதல்வர் ஈபிஎஸ்ஸை விமர்சித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுவிட்டார் தினகரன். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரத்தில் இளவரசி குடும்பத்தினர் தினகரனுக்கு எதிராக இருந்தனர். கிருஷ்ணப்பிரியாவும் விவேக்கும் தினகரன் மீது காட்டத்தை காட்டினர். ஆனால் திவாகரன் மகன் ஜெயானந்தோ, தினகரன் தரப்புக்கு ஆதரவாக கருத்துகளை கூறிவந்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் வென்ற நிலையில் இளவரசி குடும்பமும் அவர் பக்கம் சாய தொடங்கிவிட்டது. இந்த வெற்றியின் உச்சத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், ஓபிஎஸ், ஈபிஎஸ் படத்தைப் போட்டு கீழே, "இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம்- எடப்பாடி பழனிச்சாமி' என குறிப்பிட்டிருக்கிறார். அதன் கீழே தினகரன், தமது படத்தை போட்டு, இரட்டை குழல் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்- அதில் குண்டு இருக்கின்றதா? இல்லையா? - ஜெய் ஆனந்த் திவாகரன் என கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயானந்தின் இந்த பதிவு அவரது ஆதரவாளர்களிடையே வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!