என் இதயமே நொறுங்கிவிட்டது! ஃபீல் பண்ண ப்ரியங்கா சோப்ரா

avatar
டெல்லி: பாலிவுட், ஹாலிவுட் என்று அசத்தி வருகிறார் ப்ரியங்கா சோப்ரா. இந்நிலையில் பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. அதற்காக ப்ரியங்கா தனது தாயுடன் பரேலிக்கு வந்தும் சிக்கலாகிவிட்டது.

மூடுபனி காரணமாக டெல்லியில் இருந்து பரேலிக்கு விமானம் கிளம்ப ரொம்பவே தாமதமானது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு நேரில் செல்ல முடியாததை நினைத்து இதயம் நொறுங்கிவிட்டதாக ப்ரியங்கா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் விமானம் கிளம்புவதாக இல்லை. வேறு எப்படியாவது பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியுமா என்று முயன்றும் மூடுபனியால் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் ப்ரியங்கா.

5 ஆண்டுகள் கழித்து என் சொந்த ஊரான பரேலிக்கு கிளம்பினேன். என் பழைய நண்பர்கள், ஊரை பார்க்க வேண்டும் என்ற ஆசையாலும் பரேலிக்கு செல்ல ஆவலாக இருந்தேன் என்கிறார் ப்ரியங்கா. நான் நேரில் வர முடியாததை புரிந்து கொண்ட பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நன்றி. மேலும் பட்டம் பெற்று புதிய பயணத்தை துவங்குவோருக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் ப்ரியங்கா.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!