கொஞ்சம் பாத்து பண்ணுங்க! தமிழ் ராக்கர்ஸுக்கு இயக்குனர் கோரிக்கை

avatar
சென்னை: பலூன் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகும் நிலையில் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குனர் சினிஷ். சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ள பலூன் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் வசூலை மனதில் வைத்து தமிழ் ராக்கர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சினிஷ். ட்விட்டர் மூலம் தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பலூன் படத்தை அப்லோடு செய்ய 2, 659 இணையதளங்களை பிளாக் செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். எப்படியும் தமிழ் ராக்கர்ஸை ஸ்டாப் பண்ண முடியாது... தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பாத்து பண்ணுங்க... ஒரு ஒன் வீக் டைம் குடுத்தீங்கன்னா என்னோட தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு என்று ட்வீட்டியுள்ளார் சினிஷ்.

சென்னை 2 சிங்கப்பூர் படத்தை தங்களின் இணையதளத்தில் இருந்து நீக்குமாறு இயக்குனர் அப்பாஸ் அக்பர் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று படத்தை நீக்கியது தமிழ் ராக்கர்ஸ்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ரிலீஸாகும் முன்பு இயக்குனர் மோகன்ராஜாவும் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச். ராஜா பலூன்னு ஒரு படம் பண்ணி வெச்சிருக்கேன். ப்ரொமோஷனுக்கு காசு இல்லை. கொஞ்சம் பாத்து ஏதாச்சும் பண்ணுங்க சார் என்று முன்பு சினிஷ் ட்வீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!