தினகரனுக்கு அதிகரிக்கும் ஆதரவு! அதிமுக நிர்வாகிகள் அணி மாற திட்டம்!

avatar
நெல்லை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்று இருப்பதால் அவருக்கு அதிகரிக்கும் ஆதரவைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு அணி மாற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக மூன்று பிரிவுகளாக உடைந்தது. பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த போதிலும் தினகரன் தனியாக செயல்பட்டு வந்தார். இந்த இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க ஆர்கே நகரில் மூட்டி மோதின.

இபிஎஸ் அணியினர் கட்சிக்கு சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் தெம்போடு களம் இறங்கினர். தினகரன் சுயேட்சையாக களத்தில் குதித்த நிலையில், தேர்தல் முடிவில் யாருமே எதிர்பாராத வகையில் தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் தினகரன் ஆதரவாளர்கள் மிகவும் குஷியில் உள்ளனர். இதனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணி ஆதரவாளர்கள் சிலர் தினகரன் அணியில் சேர தூது அனுப்பி உள்ளனர். மேலும், எடப்பாடி அணியில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க அவர்கள் காய் நகர்த்தியும் வருகின்றனர்.

ஆர்கே நகர் வெற்றிக்கு பின்னர் அதிமுக முக்கிய புள்ளிகள் பலர் தினகரனை மறைமுகமாக ஆதரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் அதிமுக முக்கிய புள்ளிகள் இன்னும் ஊசலாட்டத்தில் இருப்பதால் அவர்கள் தினகரன் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தினகரனின் பிரம்மாண்ட வெற்றி மீண்டும் அவர்களை யோசிக்க வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கூண்டோடு அணி மாறுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!