ரயிலில் ஜன்னலோர சீட்டுக்கு இனி கூடுதல் கட்டணமாம்

avatar
சென்னை: ரயில்வேத்துறை பல்வேறு புதிய திட்டங்களின் மூலமாக அவ்வப்போது பயணிகளுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது. பண்டிகை காலத்தில் பிளக்சி பிளான் என்ற திட்டத்தின் மூலம் கட்டணங்களை உயர்த்துவது, படுக்கை வசதியில் இரவு நேரத்தில் மட்டும் படுக்க வேண்டும் உள்ளிட்ட திட்டங்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு எப்போதும் ஜன்னல் சீட்டின் மேல் மோகம் இருக்கும் என்பதால், இனிமேல் ஜன்னல் சீட்டை பதிவு செய்பவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஜன்னல் சீட்டில் வருபவர்களுக்கு கீழ் தளம் கிடைக்கும் என்பதால் வேறு வழியில்லாமல் இதற்கு பயணிகள் சம்மதிப்பார்கள் என்பது தான் ரயில்வே நிர்வாகத்தின் திட்டமாகும். இதேநிலை தொடர்ந்தால், கழிவறை உபயோகிக்க கூட ரயில்வேத்துறை கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!