ஆனந்த்குமார் ஹெக்டேவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்... மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

avatar
சென்னை: மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சுக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக பேசி இருந்தார். அதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பாஜக கட்சி திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து 'மதசார்பற்ற' என்ற வார்த்தையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார். இவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

தற்போது ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ''மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு அவர் பதவிக்கு செய்த துரோகம். மேலும் அவர் இந்திய அரசியல் அமைப்பு விதிகளை மீறிவிட்டார். அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதை விட இந்திய பிரதமர் மோடி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ''ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது. அவர் அம்பேத்காரை அவமதித்துவிட்டார்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!