வீடு இல்லாமல் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி சரிகா

avatar

மும்பை: வீட்டு பிரச்சனையில் தவித்த கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் உதவி செய்ய முன் வந்துள்ளார்.
கமல் ஹாஸனும், சரிகாவும் கடந்த 2004ம் ஆண்டு பிரிந்தனர். இதையடுத்து சரிகா மும்பையில் வசித்து வருகிறார். சரிகாவின் தாய் கடந்த நவம்பர் மாதம் காலமானார்.
அதன் பிறகு சரிகா கோர்ட்டும், கேஸுமாக அழைகிறார்.

சரிகாவின் சம்பளத்தை வைத்து அவரது தாய் மும்பை ஜுஹு பகுதியில் அபார்ட்மென்ட் வாங்கினார். ஆனால் அவர் இறந்தபோது அந்த அபார்ட்மென்ட் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் சரிகாவுக்கு இல்லாமல் யாரோ ஒரு குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாக்கர் என்பவருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய அபார்ட்மென்ட் தனக்கு இல்லை என்பதை அறிந்த சரிகா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் கோர்ட்டும், கேஸுமாக அழைகிறார். ஆமீர் கானின் சகோதரி நுஸ்ஸத்(நடிகர் இம்ரான் கானின் அம்மா) சரிகாவின் நெருங்கிய தோழி. சரிகா படும் கஷ்டத்தை பார்த்த நுஸ்ஸத் அவருக்கு உதவுமாறு ஆமீர் கானிடம் கூறியுள்ளார். அவரும் சரிகாவுக்கு உதவ முன் வந்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் மும்பையில் சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி தனியாக வசித்து வருகிறார். அவரின் தங்கை அக்ஷராவோ சரிகாவுடன் கொஞ்ச நாள், தந்தை கமலுடன் கொஞ்ச நாளுமாக தங்கிக் கொண்டிருக்கிறார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!