ரஜினியின் 'காலா' டப்பிங் ஸ்டார்ட்ஸ் நவ்... பா.ரஞ்சித் பங்கேற்பு!

avatar

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் 'காலா' படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. 'கபாலி' திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில், படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கி இருக்கிறது.


இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார். சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் 'காலா' படத்தின் முக்கிய நடிகர்கள் டப்பிங் பேசி வருகிறார்கள். காலா திரைப்படம் 2018-ம் ஆண்டு ஆகஸ்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என கருதப்பட்ட நிலையில், '2.ஓ' படத்தின் தாமதத்தால் இந்தப் படம் தள்ளிப் போயிருக்கிறது.

ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், சுதான்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 'காலா' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினி - ரஞ்சித் கூட்டணியின் முந்தைய படமான 'கபாலி' படத்துக்கும் இவர்தான் இசையமைத்தார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்ய ஶ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றி இருக்கிறார்.ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முதல் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்னும் 5 நாட்களுக்கு நடைபெறும். அதன்பிறகே, டப்பிங்கில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!