தமிழ்நாடு என்றாலே கடுப்பாகும் அனுஷ்கா

avatar
அனுஷ்காவுக்கு இப்போதைக்கு பிடிக்காத இடம் எதுவென்றால் அது தமிழ்நாடுதானாம். அதற்கு ஒன்றல்ல... பல காரணங்களை அடுக்குகிறாராம். அனுஷ்கா 2005 இல் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதற்கும் அடுத்த ஆண்டே தமிழில் ரெண்டு படம் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் தமிழ் சினிமா அனுஷ்காவை கண்டுகொள்ளவே இல்லை.

எனவே தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா விஜய்யின் வேட்டைக்காரன் மூலம் சென்னைக்கு வந்தார். அதன் பின் தமிழில் அனுஷ்காவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. எனவே ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் தமிழ் ரசிகர்கள் மீது அனுஷ்காவுக்கு உண்டு.

தெலுங்கிலும் அனுஷ்காவை வைத்து ஏராள கிசுகிசுக்கள் வந்திருக்கின்றன. நாகார்ஜுனா, நாகசைதன்யா என்று தந்தை மகன் இருவருடனும் கிசுகிசுக்கப்பட்டார் அனுஷ்கா. ஆனால் தமிழில் ஆர்யாவுடன் வந்த கிசுகிசுக்கள்தான் அனுஷ்காவை அதிகம் பாதித்தன. அதனாலேயே என்னவோ தமிழ் மீடியாவுக்கு பேட்டி அளிப்பதைத் தவிர்த்தார்.

நம்ம ஆட்கள் சும்மா இருப்பார்களா? ஒரு வார இதழில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அனுஷ்கா பேட்டி என்று எதையாவது எழுதி விடுவார்கள். இதையெல்லாம் பார்த்து மூட் அவுட் ஆவாராம் அனுஷ்கா. அதிலும் அனுஷ்காவுக்கு திருமணம் என்ற ரீதியில் அடிக்கடி வந்த செய்திகள் அனுஷ்காவை அதிகம் பாதித்ததாம்.

தெலுங்கில் ஆதி காலத்தில் அனுஷ்கா நடித்த படங்களை தமிழில் டப் செய்து விடுகிறார்கள். இதுவும் அனுஷ்காவை கடுப்பேற்றி இருக்கிறது. தெலுங்கில் ஃப்ளாப் ஆன படங்களையும் டப் பண்ணி வெறுப்பேற்றுகிறார்களாம் இங்கிருக்கும் ஆட்கள்.
இந்த காரணங்களாலேயே தமிழ் என்றால் எரிந்து விழுகிறார் அனுஷ்கா. கதை சொல்ல வரும் தமிழ் இயக்குநர்களையும் பக்கத்திலேயே அனுமதிப்பதில்லையாம்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!