ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்பு

avatar
சென்னை: சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன் இன்று சட்டசபைக்கு சென்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டிய தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இன்றைய தினம் மதியம் 1.45 மணிக்கு தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அப்போது தினகரன் உறுதிமொழியை வாசித்தார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றதற்கான பதிவேட்டில் தினகரன் கையெழுத்திட்டபோது அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவருக்கு சபாநாயகர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து வரும் ஜனவரி 8-ஆம் தேதி தமிழக சட்டபேரவை கூடும் போது தினகரனும் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்நிலையில், அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டுமானால் நேர்மையாக அரசியல் செய்ய வேண்டும். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பயந்து செயல்படுகின்றனர் என்றார் அவர்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!