வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் - ரஜினிகாந்த் அதிரடி

avatar
சென்னை: தான் விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார். ரஜினியின் இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று 20 ஆண்டுகளுக்கு மேலான நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. கடந்த ஆறு நாட்களாக கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்திவந்த ரஜினி, சந்திப்பின் கடைசி நாளான இன்று தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்து உள்ளார்.

தனக்கு பதவி ஆசை இல்லை என்றும், நாடு கெட்டுப்போய் உள்ளதால் தான் அரசியலுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். இந்திய அளவில் தமிழக அரசியல் நிலையை பார்த்து மக்கள் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதும் இந்த முடிவை எடுக்காவிட்டால் என்னை வாழ வைத்த தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யமுடியாமல் போனதாக ஆகிவிடும், அதை நினைத்து காலம் முழுவதும் வருத்தப்படுவது போல ஆகிவிடும் அதை தவிர்க்க எனக்கு இதை தவிர வேறுவழியில்லை என்று ரஜினி குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், சட்டசபையில் போட்டியிடும் நோக்கில் கட்சி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அந்த சமயத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ரஜினி அறிவித்து உள்ளார். இனி தற்போதைய அரசியல் குறித்து விமர்சிக்க போவது இல்லை என்று தெரிவித்து உள்ளார். அதற்கு பதில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் மக்களை மன்றங்கள் மூலமாக ஒன்றினைத்து அதன் மூலம் மக்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று அறிவிப்போம். பதவிக்கு வந்ததும் அதை நாங்கள் செயல்படுத்துவோம். அப்படி மூன்று வருடங்களில் செய்யமுடியாவிட்டால் ராஜினாமா செய்வோம், உண்மை, உழைப்பு, உயர்வு மட்டுமே எனது கொள்கை என்று ரஜினி தெரிவித்து உள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!