LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


தமிழக அரசியலில் அதிரடி கிளப்பும் ரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பு இதுதான்..!

Posted in forum 'EyesTube'

Report Nine

Report Nine
User Support

தமிழக அரசியலில், ஏன் இந்திய அரசியலில் இன்று ஹாட் ஸ்டாராக இருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் தான். ரஜினியின் அரசியல் அறிவிப்புப் பின் அரசியல் தலைவர்களின் இவரது வருகை குறித்துப் பெரிய அளவில் பேசி வருகின்றனர். மேலும் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் இவரது அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகையைப் பிஜேபி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்து வரும் நிலையில், ரஜினி இக்கட்சியுடன் கூட்டணி வைப்பார் எனக் கூறப்பட்டாலும், தான் தனிக்கட்சி துவங்குவதாகவே ரஜினி அறிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இவரது சொத்து மதிப்பு கவனிக்க வேண்டியதாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தற்போதைய சொத்து மதிப்பு 360 கோடி ரூபாய் என்று ஃபின்ஆப் வெளியிட்டுள்ளது. இதுவே ரஜினியின் பிரபலத்தினை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் இவரது சொத்து மதிப்பு என்பது மிகவும் அதிகமாக உயரும்.
ரஜினிகாந்த்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது, அதே நேரம் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரஜினியின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை வைத்துக் கணக்கிடப்பட்டதாக ஃபின்ஆப் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்றாலும் இந்தியா மட்டும் இல்லாமல் உலகளவில் பிரபலமான நடிகராக உள்ளார். சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ஆடம்பர கார்கள் 3 க்கும் சேர்ந்து 2.5 கோடி ரூபாய், ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை 2002-ம் ஆண்டு ரஜினி வாங்கியுள்ளார். இதன் தற்போதிய மதிப்பு என்பது 35 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. பிற நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் போன்று 10க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் ரஜினியிடம் இல்லை. ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என்றும் மொத்தம் மூன்று ஆடம்பர கார்கள் மட்டுமே இவர் பயன்படுத்தி வருகிறார்.

ஆண்டு வருவாய்:

2016 ரூ. 65 கோடி
2015 ரூ. 5.5 கோடி
2014 ரூ. 35 கோடி
2013 ரூ. 60 கோடி
2012 ரூ. 49 கோடி

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு:

1950-ம் ஆண்டுக் கர்நாடகாவில் ராமபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்பவர்களுக்கு 4வது மகனாகப் பிறந்தவர் தான் சிவாஜி ராவ் கெய்க்வாட். தனது 5 வயதில் தாயினை இழந்தார்.

படிப்பு:

பெங்களூரில் உள்ள ஆச்சார்யா பட்டாசலாவிலும் பின்னர் ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு பிரிவான விவேகானந்தா பாலக் சங்கத்திலும் அவர் கல்வி பயின்றார். மராத்தி தான் தாய் மொழி என்றாலும் அதில் எந்தத் திரைப்படமும் இவர் நடிக்கவில்லை.

நடிப்பு:

திரைப்படத்தில் நடிக்கும் முன்பு பல கடினமான வேலைகளைச் செய்தவர் முக்கியமாகப் பேருந்து நடத்துநராக இருந்துள்ளார். அதே நேரம் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை:

1990களில் இவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி என்று கூறலாம். இவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் மிகப் பெரிய வெற்றியை இவருக்குத் தேடித்தந்தன.

சிபிஎஸ்ஈ:

சிபிஎஸ்ஈ பாட புத்தகத்தில் பேருந்து நடத்துனராக இருந்து எப்படிச் சூப்பர் ஸ்டார் ஆனார் என்று இவரைப் பற்றிப் பாடமும் உள்ளது. இந்தியாவில் இருந்து சிபிஎஸ்ஈ பாட புத்தகத்தில் இடம்பெற்ற முதல் நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆக உள்ளார்.

குடும்பம்:

சென்னை எத்திராஜ் கல்லூரியில் இருந்து தன்னைப் பேட்டி எடுக்க வந்த லத்தா ரங்காசாரி என்பவரைத் திருமணம் செய்தார். இவருக்கு ஐஷ்வர்யா மற்றும் சவுந்தரியா என்று இரண்டு மகள்கள். இவரது மனைவி ‘தி ஆஷ்ரம்' என்ற பள்ளியை நடத்து வருகிறார்.

அரசியல்:

1995-ம் ஆண்டுப் பிரதமர் பி.வி நரசிம்ம ராவைச் சந்தித்த பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தர். பின்னர் ஒரு நேரம் தமிழகத்தில் திமுக-ஐ ஆதரித்துள்ளார்.

மேடைப் பேச்சு:

மேடைகளில் நேற்று நான் பேருந்து நடத்துனர், இன்று நான் நடிகன் நாளை நான் யார் என்பதைக் கடவுள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வந்தவர் தற்போது அரசியல் கட்சி துவங்க உள்ளார்.

தமிழகம்:

நேற்று அரசியல் கட்சி துவங்க இருக்கிறேன் என்று இவர் அறிவித்ததில் இருந்து தேசிய மற்றும் உலகளவில் சமுக வலைத்தளங்கள் டிரெண்டு ஆகியது மட்டும் இல்லாமல் தமிழக மக்கள் அனைவரும் ரஜினியின் அரசியல் வருகை குறித்துத் தான் பேசி வருகின்றனர்.

தி ஆஷ்ரம்:

சென்ற மாதம் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் தி ஆஷ்ரம் பள்ளிக்கு வாடகை அளிக்கவில்லை என்று புகார் வந்துள்ளது. பள்ளிக்காக வாடகைக்கு இடம் அளித்தவருக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி வாடகையில் இருந்து வரும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு இடத்தின் சொந்தக்காரர் லதா ரஜினிகாந்த் வாடகை செலுத்தவில்லை என்று கூறிய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

நதி நீர் இணைப்பு:

நதி நீர் இணைப்பிற்கு ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் அளிப்பதாகக் கூறி அதனைத் தற்போது வரை அளிக்கவில்லை என்றும் வட்டியுடன் சேர்த்து 5 கோடி அளிக்க வேண்டும் என்றும் அய்யாகண்ணு நேற்று கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடக மாநில தேரத்ல:


கர்நாடகாவில் இந்த வருடம் சட்ட மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பாஜக சார்பாக ரஜினியை பிரச்சாரம் செய்ய வைக்க அந்த கட்சி முடிவு செய்து இருக்கிறது. இப்போதே அம்மாநில பாஜக உறுப்பினர்கள் இதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பாஜக மகிழ்ச்சி:

ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்களை விட அதிகம் கொண்டாடியது பாஜக கட்சிதான். முதல் ஆளாக தமிழிசை சவுந்தரராஜன் ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ரஜினி ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும் நாத்திக அரசியலுக்கு முடிவு கட்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்தியா முழுக்க இருக்கும் பாஜக கட்சி அவரது அறிவிப்பை வரவேற்றது.

சத்யா நாராயண ராவ்:

இதேபோல் ரஜினியின் சகோதரர் சத்யா நாராயண ராவ் கோவிந்த் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''ரஜினிக்கு எப்போது தன்னுடைய பிறந்த மாநிலத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலுக்குள் வருவதன் மூலம் அவர் தமிழ்நாட்டிற்கும் நல்லது செய்ய முடியும், கர்நாடகாவிற்கும் நல்லது செய்ய முடியும்'' என்று குறியுள்ளார்.

இரு மாநிலங்களில் ஆதிக்கம்:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கப்போகும் அறிவிப்பை வெளியிட்ட உடனேயே தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ரஜினியின் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளை ஆதிர்ச்சி அடைய செய்துள்ளது என்றால் மிகையாகாது. இந்நிலையில் தற்போது கர்நாடகா அரசியலிலும் ரஜினி ஆதிக்கம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.
2/1/2018, 2:59 amPost 1
You cannot reply to topics in this forum