"நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணம்..." - நயன்தாரா கைப்பட எழுதிய புத்தாண்டு வாழ்த்து!

avatar
சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் அளவுக்கு நடிகை நயன்தாரா சினிமாவில் முக்கிய இடத்தில் உள்ளார். 2018 புத்தாண்டுக்காக அவர் தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தியின் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும். நீங்கள் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாக்கி இருக்கிறீர்கள். உங்கள் அன்பு என் வாழ்க்கையை அழகாக்கியுள்ளது.


என்னால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுத்து வருகிறேன். மற்றதை கடவுளிடம் விட்டுவிட்டேன். உங்கள் அன்பால் நான் பொழுதுபோக்கான படங்கள் மட்டுமல்லாது 'அறம்' மாதிரியான நல்ல படங்களையும் கொடுக்க முடிந்தது. இந்த நாளில் சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன். இந்த வருடம் மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்பால் தான் நான் சினிமாவில் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் எனக்கும் சிறு இடம் கொடுத்ததற்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா தனது கைப்பட எழுதி வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா ரசிகர்கள் நயன்தாராவுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நயன்தாராவின் ட்வீட் அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!