ஓவியா- சிம்புவின் நியூ இயர் சர்ப்ரைஸ்! - 'மரண மட்ட' பாடல் இதோ!

avatar

சென்னை: நடிகை ஓவியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் தமிழ் ரசிகர்களை தன் இயல்பான குணத்தால் கவர்ந்தவர்.

நேற்று சிம்பு, மிர்ச்சி விஜய் ஆகியோருடன் ஓவியா இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இதனால், சிம்புவுடன் ஓவியா படத்தில் நடிக்கிறாரா அல்லது ஒரு பாடலா என்ற சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச்சுக்கள் அடிபட்டது.
இப்போது, புதிய நியூ இயர் பாடலொன்றை ஓவியா பாட, சிம்பு இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்த புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் 'மரண மட்ட' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை ஓவியா பாட சிம்பு இசைமைத்துள்ளார். சிம்பு, ஹரிஷ் ஆகியோரும் ஓவியாவுடன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை வீடியோ வடிவமாக ரசிகர்களுக்கு நியூ இயர் சப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்துள்ளனர். இந்தப் பாடலில் ஓவியாவின் கியூட்டான ரியாக்‌ஷன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது.

மேலும் இந்த பாடலின் வரிகளை சிம்புவும், மிர்ச்சி விஜய்யும் இணைந்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் அனிதா உதீப் இயக்கும் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 'நியூ இயரு நைட்டு... ஆகலாமா டைட்டு...' என ஓவியாவின் குரலில் தெறிக்கும் இந்தப் பாடல் இளைஞர்களின் மொபைலில் இனி நியூ இயர் பாடலாக ஒலிக்கப்போகிறது. ஓவியா ஆர்மியினர் இந்தப் பாடலால் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் பாடலுக்குப் பிறகு 'ஆஃப்டர் சரக்கு '#DesiKuthu என்கிற பெயரில் இன்னொரு பாடல் ஒன்றும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலையும் ஓவியாவே பாடியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!