மீண்டும் த்ரிஷாவுக்கு ப்ரபோஸ் செய்த ஆர்யா

avatar

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்தும் எதுவும் செட் ஆகவில்லையாம். ஆர்யாவின் பிரியாணி விருந்து பிரபலமாகியுள்ளதால் அவருக்கு பெண் கொடுக்க தயங்குவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவரே பெண் தேடி வீடியோ வெளியிட்டார். ஆனால் அது ஒரு டிவி நிகழ்ச்சிக்காக என்று கூறப்படுகிறது.

த்ரிஷாவுக்கு ட்விட்டர் மூலம் ப்ரொபோஸ் செய்தார் ஆர்யா. பின்னர் நடிகை அமலா பாலுக்கும் ப்ரொபோஸ் செய்தார். இருவருமே ஆளை விட்டால் போதும்டா சாமி என்பது போல் நழுவிவிட்டனர். த்ரிஷா, நிவின் பாலி நடித்துள்ள ஹே ஜூட் பட ட்ரெய்லரை பார்த்த ஆர்யா ட்வீட்டியிருப்பதாவது, வாவ் குஞ்சுமணி நீ ரொம்ப சூப்பர். இப்போ தான் ட்ரெய்லரை பார்த்தேன். உன் படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்..(நான் இன்னும் அந்த ரோஜாவை வைத்திருக்கிறேன் கொடுக்கட்டுமா) மலையாளத்தில் அறிமுகமாவதற்கு வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள். நிவின் நீங்க வேற லெவல் ப்ரோ.

சர்வம் படத்தில் செல்லமாக குஞ்சுமணி என்று அழைத்ததை இன்றும் தொடர்கிறார்கள் த்ரிஷாவும், ஆர்யாவும். அந்த படத்தில் நடித்த அனுபவத்தை இருவரும் மறக்கவில்லை. ஆர்யா தற்போது கஜினிகாந்த் படத்தில் சயீஷா சைகலுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சயீஷாவின் புகைப்படத்தை வெளியிட்டு ஜூஸி என்று ட்வீட்டி நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!