இமான் இசையில் நூறாவது படம்... திரைப் பிரபலங்கள் வாழ்த்து!

avatar

சென்னை: இன்றைய இளைஞர்களின் மெலடி ஹிட்ஸ் ப்ளேலிஸ்ட்டை தனது பாடல்களால் நிறைத்திருப்பவர் இசையமைப்பாளர் டி.இமான். மீடியம் பட்ஜெட் படங்களின் மோஸ்ட் வான்டட் இசை அமைப்பாளர் இவர்தான். 'டைம் டைம் இல்ல' என படங்களை ஒப்புக்கொள்வதைத் தவிர்க்கும் அளவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. இவரது இசையில் உருவாகியிருக்கும் நூறாவது படம் ஜெயம் ரவி நடிக்கும் 'டிக் டிக் டிக்'.

பள்ளியில் படிக்கும்போதே இசை மீது ஆர்வம் கொண்ட டி.இமான், முறைப்படி இசை கற்று 15 வயதில் கீ போர்ட் ப்ளேயர் ஆனார். நடிகை குட்டி பத்மினி கிருஷ்ணதாஸி என்ற சின்னத்திரை தொடருக்கு இமானை இசை அமைப்பாளர் ஆக்கினார். அதன்பிறகு சிங்காரம், கோலங்கள், முகங்கள், அகல்யா, கல்கி, அல்லி ராஜ்யம், திருமதி செல்வம், வசந்தம், உறவுகள், செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களுக்கு இசை அமைத்தார். தொடர்ச்சியாக இத்தனை சீரியல்களுக்கு இசையமைத்து சினிமாவில் வாய்ப்பு பெற்றார்.

அதன்பிறகு 'காதலே சுவாசம்' என்ற படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளர் ஆனார். தமிழன், சேனா, விசில், கிரி மீடியம் பட்ஜெட் படங்களின் இசை அமைப்பாளர் ஆனார். பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படம் இமானை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. 'மைனா' படத்தின் வெற்றியும் அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களின் வெற்றியும் அவரை பெரிய பட்ஜெட் படங்களின் இசை அமைப்பாளராக்கியது. கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரோமியோ ஜூலியட், மிருதன் என தொடர் ஹிட்டுகளை கொடுத்தார்.

தற்போது வணங்காமுடி, டிக் டிக் டிக் உள்பட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். டிக் டிக் டிக் திரைப்படம் டி.இமானின் 100-வது படம். ஹாலிவுட் பாணியில் தயாராகி வரும் விண்வெளிப் பயணக்கதையான 'டிக் டிக் டிக்' படத்தில் இமான் தனது இசையை வேற லெவலில் தந்திருக்கிறாராம். 100-வது படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் இமானுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Imman100 எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!