LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


எதுக்கு 2021 வரை வெயிட்டிங்.. உள்ளாட்சித் தேர்தலிலேயே ரஜினி பலத்தை காட்டலாமே?!

Posted in forum 'EyesTube'

ELY Niya

ELY Niya
New Member

சென்னை: அடுத்த சட்டசபைத் தேர்தலின்போது போட்டியிடுவோம் என்று ரஜினி கூறியிருக்கிறார். இங்கும் விஜயகாந்திடம் அவர் கற்க வேண்டிய ஒரு நல்ல பாடம் உள்ளது. அரசியலில் குதிக்கவே 20 வருட காலம் போய் விட்டது. அடுத்து தேர்தலில் போட்டியிட இன்னும் 3 ஆண்டு காலம் வெயிட்டிங் என்று கூறி விட்டார் ரஜினி. அப்படியானால் சட்டசபைத் தேர்தலில் மட்டும்தான் ரஜினி கட்சி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடையில் வரும் உள்ளாட்சித் தேர்தல் எல்லாம் தேர்தலே கிடையாதா என்ற கேள்வியும் பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில் இதுதான் மக்களுக்கான தேர்தல். இங்கு கட்சி, கொடி, சின்னத்திற்கு அப்பாற்பட்டு உள்ளூர் மக்களுக்கே வெற்றி கிடைக்கும். இதுதான் உண்மையில் நமது பலத்தை சோதித்துப் பார்க்க நல்ல களமும் கூட. இதில் விஜயகாந்த்தை, ரஜினிகாந்த் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு தனது பலத்தை உள்ளாட்சித் தேர்தலில்தான் சோதித்துப் பார்த்தார். அதேபோல கட்சி ஆரம்பித்ததும் வந்த முதல் தேர்தலையும் அவர் ஒரு கை பார்த்தார்.

அதாவது பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று அவர் காத்திருக்கவில்லை. வந்த வாய்ப்புகளையெல்லாம் அவர் பயன்படுத்தினார். வெற்றி தோல்வி என்பதை விட போட்டியிடுவது என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. மக்களிடம் வேகமாக நெருங்க வேண்டும் என்பதில்தான் கவனமாக இருந்தார். அதை விட முக்கியமாக மின்னல் வேகத்தில் அவரது திட்டமிடல்கள் இருந்தன. வந்தோமோ, அடித்தோமோ, நொறுக்கினோமா என்ற ரீதியில் அவரது செயல்பாடுகள் இருந்தன. மற்றவர்களின் ஆலோசனைகளை அவர் நிறைய வாங்கிக் கொண்டாலும் கூட முடிவெடுப்பதில் வேகமாக இருந்தார் விஜயகாந்த்.

உண்மையில் சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தலை விட மக்களை மிகவும் நெருக்கமாக அணுக உதவுவது உள்ளாட்சித் தேர்தல்தான். இத்தேர்தலில் போட்டியிட கட்சி தேவையில்லை. அமைப்பு தேவையில்லை, கொடி, சின்னம் என எதுவுமே முக்கியமில்லை. அட, அரசியல் குதிக்கக் கூட வேண்டியதில்லை.

ரஜினிக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தால் அவர் சொல்லும், அவர் நிறுத்தும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெற முடியுமே. இதற்கு சின்னம் தேவையில்லை. 30 வருடமாக அவர் ஏராளமான சமூகப் பணிகளை செய்து வருவதாக கூறுகிறார். அப்படியானால் அதைச் சொல்லியே மக்களிடம் வாக்கு கேட்கலாமே. எதற்காக இன்னும் 3 வருடம் காத்திருக்க வேண்டும்?

ரஜினிக்காக ரசிகர் மன்றத்தினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிறகென்ன தயக்கம். உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை இறக்கி விட்டு தான் யார் என்பதை ரஜினி நிரூபிக்கலாமே.. இது மிகவும் சுலபமான வழியும் கூட. ரொம்ப சிரமப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

ரஜினி என்றாலே வேகம்தான். எனவே 3 வருடம் காத்திருப்பதை விட அதற்கு முன்பாக வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்ட ரஜினி முயல வேண்டும். மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களை அவரது கட்சியினர் கைப்பற்றினால் அதை வைத்து மக்கள் பணியாற்றி, 234 சட்டசபைத் தொகுதிகளையும் அப்படியே அலுங்காமல் குலுங்காமல் அள்ளி விடலாம். பிறகு 39 லோக்சபா தொகுதிகளையும் கூடவே புதுச்சேரியையும் சேர்த்து எடுத்து விடலாம். கஷ்டமே இருக்காது. ஸோ, உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ரஜினி பயப்படக் கூடாது.. தைரியமாக இறங்கி அடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
4/1/2018, 2:57 amPost 1
You cannot reply to topics in this forum