தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க ரசிகர்களுக்கு ரஜினி தடை போட்டது ஏன்?

avatar
சென்னை: தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விவாதங்களில் பங்கேற்க ரசிகர்ள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதித்துள்ளது ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்.
கட்சி அறிவிக்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியாகும்வரை யாரும் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்று, ரஜினி சார்பில் பேச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் ரசிகர் மன்ற நிர்வாகி விஎம் சுதாகர்.

இதுகுறித்து அவர் இன்று அவர் விரிவான அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

உண்மையில் ரஜினிகாந்த் சார்பாகவோ, அவரது ரசிகர்கள் சார்பாகவோ இவர்தான் பேச வேண்டும் என யாரையும் ரஜினி மன்றம் அறிவிக்கவில்லை. நடிகர் ஜீவாவுக்கு மட்டும் அந்த அனுமதியை ரஜினியே கொடுத்திருந்தார். ஆனால் பின்னர் ரஜினி ஆதரவு என்ற பெயரில் பலரும் விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர். இதில் நிறைய முரண்பாடுகள் ஏற்பட்டன. ரஜினி சொல்லாத விஷயங்களை சொன்னதாகத் தெரிவித்தனர் அல்லது பயிற்சியின்மையால் தடுமாறினர்.

இதைக் கருத்தில் கொண்டே ரசிகர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இதற்கென தனி பேச்சாளர் குழுவே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. தலைமை மன்ற பேச்சாளர்கள் என அறிவிக்கப்படும் நபர்கள் மட்டுமே இனி இத்தகைய விவாதங்களில் பங்கேற்க முடியும்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!