கமல், விஜய், விஷால் பாணிக்கு மாறிய ரஜினி!

avatar
சென்னை: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றியமைத்த நிலையில் நடிகர் ரஜினி ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றியமைத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். அவரது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது.
உலக நாயகன் கமலஹாசன் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி அமைத்தார். இதே போன்று நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கங்களாக மாற்றியுள்ளார்.

நடிகர் விஷால், திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கங்களாக மாற்றியமைத்துள்ளார். இந்த நற்பணி இயக்கத்தின் செயலாளராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளார். நடிகர் விஜய்யும், தனது ரசிகர் மன்றங்களை, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றியமைத்த நிலையில், விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்ய இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியானது. தனது மகன் பற்றி அவரது தந்தை பல பேட்டிகளை கொடுத்துள்ளார். ஆனால் நேரடியாக அரசியலுக்கு வருவார் என்று கூறவில்லை.

நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றியமைத்துள்ளார். அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இணையதளத்தில் பெயரை ரஜினி மாற்றியுள்ளார். ரஜினிக்கு முன்பாகவே பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் மக்கள் இயக்கமாக ரசிகர் மன்றங்களை மாற்றிய நிலையில் கமல், விஜய், விஷால் பாணியில் ரஜினியும் மாறியுள்ளார்.

ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் லேட்டாக இருக்கலாம். ஆனால் அரசியல் வருகையை அறிவித்துவிட்டு லேட்டஸ்டாக பெயர் மாற்றம் கொண்டுவந்துள்ளார் என சிலாகிக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அப்படியானால், மக்கள் இயக்கம் என்ற பொருளில் நற்பணி மனற பெயர்களை மாற்றிய பிற நடிகர்களும் அரசியலுக்கு வரப்போகிறார்களா?

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!