கர்நாடக அரசியலிலும் அதிர்வலையை ஏற்படுத்திய ரஜினிகாந்த்!

avatar
கர்நாடகாவிலும் அதிர்வை ஏற்படுத்திய ரஜினியின் அரசியல் வருகை- வீடியோ
சென்னை: ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை கர்நாடகாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில், ரஜினிகாந்த் தங்கள் கட்சிக்கு எதிராக எதிராக பிரச்சாரம் செய்ய கூடுமோ என்ற யோசனையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் வரும் மே மாத வாக்கில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, மற்றும் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், ரஜினிகாந்தை பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவைக்கும் முயற்சிகளில், பாஜக கட்சி இறங்கியுள்ளது. கர்நாடகாவில் ரஜினிகாந்த் வெகு பிரபலம். மைசூர், பெங்களூர், கோலார், ஷிமோகா போன்ற தமிழர்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் ரஜினிகாந்த்தை பயன்படுத்தி தமிழர்கள் வாக்குகளை பெற பாஜக முயற்சி செய்துவருகிறது. கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு கர்நாடக தமிழர்களிடம் நல்ல மரியாதை உள்ளதால், அவர் ரஜினிகாந்த்தை தனது பிரச்சாரத்தில் பயன்படுத்த வெகுவாக முயல்வதாக கூறப்படுகிறது.

இதுவரை ரஜினிகாந்த் தரப்பில் இதற்கு ஒப்புதல் தரவில்லை என கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஆன்மீக நம்பிக்கையுள்ளவர் என்பதால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படமாட்டார் என பாஜக நினைத்து காய் நகர்த்தி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரை எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட போவதில்லை என ரஜினி நினைப்பதால், கர்நாடகாவில் அவர் பிரச்சாரம் செய்ய செல்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இருப்பினும் கர்நாடக காங்கிரசாருக்கு இந்த தகவல் சற்று கிலி ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இதுபற்றி கூறுகையில், இதுபோன்ற திட்டங்களை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் கர்நாடகாவில் ரஜினிகாந்த்தால் தாக்கம் இருக்காது என்றார். முதல்வர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டபோது, வெகுமக்களுக்கு பரிட்சையமானவர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான் என கூறியிருந்தார்.

மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவாக இருந்தார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறுகையில், நாட்டு நலனுக்காக ரஜினிகாந்த், பாஜகவோடு கை கோர்க்க வேண்டும் என கோரிக்கைவிடுப்பதாக தெரிவித்தார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!