LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


திருவள்ளுவர் சிலை வருவதற்கு முன் கன்னியாகுமரி எப்படி இருக்கு பாருங்க!

Posted in forum 'Cinema News'

avatar

User Support

கன்னியாகுமரி.. தமிழ்நாடல்ல இந்தியாவல்ல.. உலகின் எந்த முனைக்கு சென்றும் சுற்றுலா செய்யும் ஒருவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் கன்னியாகுமரியின் அழகிய அமைப்பு.


திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும், அழகிய சூரிய ஒளியும் உதிக்கும், மறையும் நேரங்களும் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் அப்படியே மனிதில் நிற்கும். கன்னியாகுமரியில் இதுமட்டுமல்ல, பல சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. இவையெல்லாம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்றால் நம்பமுடியுமா? மறந்துவிட்டீர்களா மனிதன் தோன்றும் முன்னரே குமரிக் கண்டம் இருக்கிறது.

நாகராஜாகோயில்:


நாகராஜா கோயிலின் பழமையான புகைப்படம். ஆண்டு தெரியவில்லை.
நாகராஜா கோயில் மிகமிகப் பழமையான கோயில் ஆகும். இது தமிழகத்தின் ஆதிகால கோயில்களில் ஒன்று. நாட்கள் மாற மாற இதன் கட்டுமானப்பணிகள் புதுப்பிக்கப்பட்டு செப்பனிடப்பட்டதால் இப்போதும் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.

குமரி கோயில்:


கன்னியாகுமரியை ஆள்பவளான குமரியின் கோயில் இது. பகவதி அம்மன் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். குமரி அம்மன் கோயில் அல்லது கன்னியாகுமரி கோயில் கடல் கரையோரமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவி. பார்வதி தேவி சிவனை அடையும் பொருட்டு இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி என்ற பெயர் கன்யா (அர்த்தம்: கன்னி) + குமரி (அர்த்தம்: பெண்) என்பதை குறிக்கும். புராண கதைகளின் படி சிவனுக்கும் கன்னியாகுமரிக்கும் (பார்வதி தேவி) நடக்கவிருந்த திருமணம் நடக்கவில்லை. ஆதலால் பார்வதி தேவி தான் ஒரு கன்னி தேவதையாக விளங்க முடிவு செய்து விட்டதாக கூறுகிறது புராணம். மேலும் திருமணத்திற்காக சேகரித்த தானியங்கள் அனைத்தும் சமைக்கப்படாமல் போனதால், அவைகள் கல்லாக மாறிப்போனதாகவும் கதைகள் உண்டு.

தமிழகத்தின் ஆரம்பகால பேருந்து:


தமிழகத்தில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது இப்படியாகத்தான் இருந்தது. இப்போது போல 54பேர் அமர்ந்து செல்லும் பேருந்து அல்ல அது. பத்து பன்னிரெண்டு பேர் பயணம் செய்யும் பேருந்து.

கன்னியாகுமரி கோயிலின் பழைய தோற்றம்:


இந்த கோயிலின் தெய்வத்தின் மூக்குத்தி ஒளி பட்டு, கடலில் செல்லும் பயணிகள் ஈர்க்கப்படுவதாகவும், இதனால் தெற்கு பக்கம் உள்ள கதவு எப்போதும் சாத்தப்பட்டே இருக்கும். அவசியம் வரும்போதுமட்டுமே மூக்குத்தி சாத்தப்படும் என்றும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தானியங்களை போல் இருக்கும் கற்களை, நடக்காத திருமணத்தின் அடையாளமாக எண்ணி சுற்றுலா பயணிகள் வாங்கிச்செல்வர். இக்கோயில் 18-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் விஜயநகர், சோழர்கள் மற்றும் நாயகர்களால் புதுபிக்கப்ட்டது. மேலும் இக்கோயிலில் 18-ஆம் நூற்றாண்டின் ஒரு புனித ஸ்தலமான பார்வதி தேவியின் கால் தடங்களை இன்றும் சுற்றுலா பயணிகள் கண்டு வணங்கலாம்.

சுசீந்திரம் கோயில்:


சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை ஒருங்கே பெற்ற இந்தியாவின் ஒரே மிகப்பழமையான கோயில் தாணுமாலையன் கோயில்தான். இது கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் செல்லும்போது வழியில் உள்ளது.
கலைநயமிக்க செண்பகராமன் மண்டபம், இசைத்தூண்கள் கொண்ட குலசேகரமண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம் ஆகியன இங்கு சிறப்பானதாகும்.

குமரிக்கடல்:


குமரியின் ஆர்ப்பரிக்கும் கடல் அந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி மகிழ்வோருக்கு உகுந்த இடமல்ல கன்னியாகுமரி. இருப்பினும் இங்கே நம் மனம் விரும்பியவர்களுக்கான நினைவுக் குறிப்புகள் வாங்க பல கடைகள் உண்டு. பலவிதமான கடல் சிப்பிகளும், சிப்பிகளை வைத்து உண்டாக்கிய ஆபரணங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளும் கிடைக்கும். உள்ளூர் மக்களால் செய்து விற்கப்படும் கைவினைப் பொருட்களும் ஏராளமாக கிடைக்ககூடும். இந்த அழகிய பொருட்கள் பிரம்பு, மூங்கில் மற்றும் மரத்தினால் செய்யப்பட்டவைகள். இவைகளை வாங்கி நம் வீட்டை அலங்கரிக்கலாம் அல்லது உற்றார், உரிவினர் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிக்காம்.

இரட்டைப் பாறை:


விவேகானந்த மண்டபமும், வள்ளுவர் சிலையும் கட்டப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டது இந்த படம். தூரத்தில் தெரியும் ரெட்டைப் பாறையில்தான் இப்போது விவேகானந்த மண்டபமும், வள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

1932ல் பேருந்து சேவை:


நாகர்கோயில் திருநெல்வேலி பேருந்து சேவை. திருநெல்வேலிவரை செல்லும் இந்த பேருந்து அந்த காலத்தில் இயக்கப்பட்டு வந்துள்ளது. குளத்துக்கரையில் தான் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளதாம். அவ்வப்போது பேருந்து இயக்கப்பட்டாலும், மிக மிக குறைவான எண்ணிக்கையில்தான் பேருந்து இருந்துள்ளது.

ராஜேந்திர சோழன் கட்டிய கோயில்:


அந்த காலத்தில் சோழன் கட்டிய கோயிலாக இது கருதப்படுகிறது. ஏனெனில் குமரி அப்போது கேரளா வசம் இருந்தது. இந்த வடிவத்தில் கோயில்கள் கட்டுவது சோழர்கள்தான். ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காச்தியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன. கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் கன்னியாகுமரியிலுருந்து ஏறக்குறைய 85 km தொலைவில் அமைந்துள்ளது.

மீன்பிடி தொழில் செய்யும் மலையாளிகள்:


கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

மிகவும் பழைய புகைப்படம்:


சமயம் மற்றும் கலைகளுக்கு மட்டும் பேர் போனதல்ல கன்னியாகுமரி. சில ஆண்டு காலங்களாக தொழில் மற்றும் வர்த்தகத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது. கன்னியாகுமரி பாண்டியர்கள், சோழர்கள், நாயகர்கள், சேரர்கள் போன்ற பல அரச சம்ராஜ்யங்களால் ஆளப்பட்டவை. இங்குள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலையும் இந்த சாம்ராஜ்யங்களின் கலை மற்றும் நாகரிகத்துக்கு மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம்:


பின்நாளில் கன்னியாகுமரி வேணாடு அரசவம்சம் கீழ் ஆளப்பட்டது. அவ்வேளையில் கன்னியாகுமரியின் தலைநகரம், பத்மநாபபுரத்தில் இருந்து வந்தது. 1729-1758 இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வேணாட்டின் அரசரான அனிழம் திருநல் மார்த்தாண்ட வர்மாவால் உருவாகப்பட்டது தான் திருவாங்கூர் அரசு. அதில் தெற்கு திருவாங்கூர் இந்நாளில் கன்னியாகுமரி மாவட்டதின் கீழ் அமையப்பெற்றிருக்கிறது. பரவர் ராஜாங்கத்திற்கு பிறகு, இந்தியா 1947-ல் சுதந்திரம் அடையும் வரை, கன்னியாகுமரி வெள்ளையர்களின் துணையோடு திருவாங்கூர் சமஸ்தானத்தால் ஆளப்பட்டது. பின் 1947-ல், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தனி ஆளுமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

பழைய வயல் வீடு:


ஆயிரம் ஆண்டு காலமாக கலை, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கு பேர்போன்றதாக விளங்குகிறது கன்னியாகுமரி. கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் கலவையாக கன்யாகுமரி விளங்குவதால் இங்கே கலவையான பண்பாடை பார்க்கக்கூடும். கன்னியாகுமரி பல புனித பயணம் மேற்கொள்பவர்களை கவர காரணம், பல நூற்றாண்டுகளாக இங்கே கொட்டிக் கிடக்கும் வளமான பாரம்பரிய கலாச்சாரமே. ஏராளமான அழகிய கிறிஸ்துவ ஆலயங்கள், கோயில்கள், கற்சிலைகள் மற்றும் மதத்தூண்களை இங்கே கண்டு களிக்கலாம்.

ஆறு:


இங்கு பல ஆறுகள் ஓடுகின்றன. இது செங்கனூர் எனும் ஆறு. 1900களில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் முன்பு கன்னியாகுமரி கேரளத்துடன் இணைந்திருந்தபோது எடுக்கப்பட்டது.

நதிக்கரை:


நதிக்கரையில் அந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

செக்கு:


எண்ணெய் பிழியும் செக்கு.

பழைய படம்:


தேங்காய் கொண்டு செல்லும் சிறுவர்கள்.

பழையகால படகு:


படகு சவாரியின் மூலம் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு செல்லும் பயணிகள். அந்த கால புகைப்படம்

முடிதிருத்தும் தொழிலாளர்:


தெருவில் வைத்து முடி திருத்தும் தொழிலாளர். அவரிடம் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் வாடிக்கையாளர் ஒருவர்.

நாகராஜா கோயில் திருவிழா:


மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாகராஜா கோயிலின் அந்த காலத்து திருவிழா புகைப்படம் இதுவாகும்.
on 11/1/2018, 11:38 pmPost 1
You cannot reply to topics in this forum