ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள!

avatar

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பு திரண்டுள்ளனர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரஜினி ரசிகர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் ரஜினி நிச்சயம் சந்திப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் நடிகர் ரஜினி காந்த் அதிகாலையிலேயே கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அதனை ஏற்க மறுத்துள்ள ரசிகர்கள் ரஜினி நிச்சயம் தங்களை சந்திப்பார் என கூறி அங்கே காத்திருக்கின்றனர். காலை முதல் காத்திருக்கும் ரசிகர்கள் இதுவரை ரஜினி வராததால் ஏமாற்றமடைந்துள்ளனர். அவரது பிறந்த நாளான இன்று கட்சிக்குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி ரசிகர்களை சந்திக்காமல் தவிர்த்துள்ளார். ரஜினி அரசியலுக்கும் வருவார் தங்களை சந்திக்கவும் வருவார் என பதாகைகளுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்களை போலீசார் வெளியேற்றியதால் ரசிகர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திரைத்துறையில் தொடக்கம் முதலே கதாநாயகனாக வலம் வரும் நடிகர்களில் ஒருவரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமுமான நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

இன்று (12.12.2017) காலை 6 மணி முதலே ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரசிகர் மன்றக் கொடியை கையில் ஏந்தியவாறு போயஸ் கார்டன் நுழைவு சாலையில் இருந்து ரஜினி இல்லம் நோக்கி அணி அணியாக வரத் தொடங்கினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் வரை ரசிகர்கள் திரண்டு நின்றதால் முன் எச்சரிக்கையாக ரசிகர்களை போலீசார் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றினர்

ரஜினி இல்லத்தை இணைக்கும் மற்றொரு சாலையான ராதாகிருஷ்ணன் சாலை அருகே ரசிகர்களை போலீசார் வெளியேற்றிவிட்டனர்.இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் ரசிகர்கள் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.

கடந்த பிறந்தநாளின் போது ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் திடீரென ரசிகர்கள் மத்தியில் தோன்றி பேசினார். அது போன்றே இந்த முறையும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பால் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!