LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


10 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய சீனா..!

Posted in forum 'World News'

avatar

User Support

பொதுவாக சீன தயாரிப்புகளும், சீன நிறுவனங்களும் வெளி சந்தையில் குறைவாகவே மதிப்பிடப்படும், ஆனால் கடந்த 10 வருடத்தில் தலைகீழாக மாறி, இந்தியா வர்த்தகச் சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளித்து வருவது எத்தனைப் பேருக்கு தெரியும். இதனால் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாரிப்புக்கு இணையான தரத்தை அளிக்க முடியாமல் தவித்து வருவதால், சீன பொருட்களை நம்பி வர்த்தகம் செய்ய நகர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இந்திய சந்தை தற்போது சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது.

உதாரணமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமியை எடுத்துக்கொள்ளலாம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சந்தைக்கு வரும் போத இது ஆப்பிள் நிறுவனத்தின் காப்பி எனப் பேசியவர்கள் ஏராளம். ஆனால் தொடர்ந்து தரம் மற்றும் வடிவமைப்பை மெருகேற்றியதால் இந்தியாவில் இன்று அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் சியோமி முதல் இடத்தில் உள்ளது.
இது மிகவும் சிறிய காலகட்டத்தில் நடந்தது.


இந்திய வர்த்தகத்தில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தின் வளர்ச்சி ஸ்மார்ட்போன் துறையில் மட்டுமல்ல, லேப்டாப், மேமிங் கன்சோல்ஸ், கம்பியூட்டர் பொருட்கள், லைப்ஸ்டைல் பொருட்கல்ஷ நெட்வொர்க் உபகரணங்கள், ஆடைகள், பொம்மைகள், சூட்கேஸ் மற்றும் பேக்குகள் ஆகிய துறைகளிலும் அதிகரித்துள்ளதது.

இதில் முக்கியமாக நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஜியோனி, ஹூவே, சியோமி; சோலார் பேனல் துறையில் டிரினா சோலார், ஜின்கோ சோலார், கோல்டன் கன்கார்டு ஹோல்டிங்க்ஸ் மற்றும் லான்கி; ஆட்டோ காம்போனென்ட்ஸ் துறையில் வேன்பெங் ஆட்டோ வீல்ஸ், கிங்பா மற்றும் லீசோ; கட்டுமான உபகரணங்கள் பிரிவில் சைனி, லியூகாங்; டெலிகாம் உபகரணங்கள் பிரிவில் ஹூவே மற்றும் ZTE; ஈகாமர்ஸ் துறையில் பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபா, பிளிப்கார்ட் நிறுவனத்தில் டென்சென்ட்.
இப்படிப் பல்வேறு துறையில் பல சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது.

சரி எல்லாச் சீன பொருட்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தடைவிதித்தால் பிரச்சனை முடிந்தது என்றால், நிச்சயம் இல்லை. இந்திய நுகர்வோர் சந்தை கிட்டத்தட்ட 30 சதவீதம் சீன நிறுவனங்களையும், சீன பொருட்களையும் நம்பியுள்ளது. ஆகவே இதைத் தடை செய்தால் மொத்த சந்தையும் முடங்கிவிடும். இதன் அளவீடு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலும் சற்றுக் குறைவு அவ்வளவுதான் வித்தியாசம்.

சீனா உலக நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களுக்கான பவர்ஹவுஸாக விளங்குகிறது, ஆனால் தொடர்ந்து தரத்தில் குறைபாடு உடனேயே இருந்தது. நீண்ட கால நோக்கில் திட்டமிட்ட சீன நிறுவனங்கள் எதிர்பாராத விதமாகத் தரத்தின் அளவுகளை 10 வருடத்திற்கும் குறைவான காலத்தில் உயர்த்தி உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. குறிப்பாக இந்தியாவை.

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியா சுமார் 60 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது, இதில் சீன நிறுவனங்கள் வெறும் 278 மில்லியன் டாலர் அளவில் மட்டுமே முதலீடு செய்துள்ளது.
இக்காலகட்டத்தில் தனது முதலீட்டு அனைத்தையும் தனது உற்பத்தி சந்தையிலும் , தரத்தை உயர்த்துவதிலும் முதலீடு செய்துள்ளது.
ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2017 வரையிலான காலத்தில் சீனா இந்தியாவில் வெறும் 1.636 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே முதலீடு செய்துள்ளது.

இதே காலகட்டத்தில் சீனாவில் அலிபாபா, பெய்டூ, டென்சென்ட், வீசேட் மற்றும் சியோமி ஆகிய நிறுவனங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து பில்லியன் டாலர் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

சியோமி போலவே சீனாவின் ஆட்டோமொபைல் சந்தையில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான கீலி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வடிவத்தைக் காப்பி அடித்துக் கீலி ஜிஈ என்ற காரை அறிமுகம் செய்தது. முதலில் இது பெரியதாக வெற்றியை அடைவில்லை என்றாலும் இன்று, சீனாவின் முக்கியக் கார் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

கீலி நிறுவனம் உலகதரத்திற்குக் கார்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் எனக் கனவுடன் வால்வோ நிறுவனத்தின் வர்த்தகத்தை 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. புதிய வடிவங்கள், தயாரிப்பு முறைகளின் மூலம் தற்போது கீலி கட்டுப்பாட்டில் இருக்கும் வால்வோ கார் சந்தையில் ஆடி, பிஎம்டபள்யூ, பென்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளிக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்த சியோமி தற்போது ஆட்டோமொபைல் சந்தையிலும் இறங்கியுள்ளது. தனது விற்பனையை இதுவரை சீனாவில் மட்டுமே வைத்திருந்த நிலையில் இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்ய உள்ள சீயோமி, சீனாவின் அடுத்தக் கீலியாக உருவாக வாய்ப்புகள் உள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை இன்றைய மதிப்பு 8 பில்லியன் டாலர். இந்தியாவில் சியோமி, ஓப்போ, விவோ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களின் வெற்றியின் காரணமாக மொத்த சந்தையில் 51 சதவீதம் சீனவை நம்பியுள்ளது. டெலிகாம் உபகரணங்கள் பிரிவில் வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் பெரும் பகுதி சீனாவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் இருமுனை வர்த்தகம் செய்யும் நாடுகளில் சீன முதல் இடத்தில் உள்ளது. ஒருவருடத்திற்குச் சுமார் 71.5 பில்லியன் டாலர் வரையிலான வர்த்தகம் இரு நாடுகள் மத்தியில் நடக்கிறது. இதில் அதிகம் லாபம் அடைவது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 61.3 பில்லியன் டாலர் அளவிற்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையில், சீனா வெறும் 10.3 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை மட்டுமே இந்தியாவிடம் இருந்து பெறுகிறது

இப்படி ஒவ்வொரு துறையும், பொருட்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ள சீனா நிறுவனங்களிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பைப் பாருங்கள்.

எல்க்டிக்கல் பொருட்கள்: 21.9 பில்லியன் டாலர்
மெஷினரி மற்றும் உதிரிப் பாகங்கள்: 11.1 பில்லியன் டாலர்
ஆர்கானிக் கெமிக்கல்ஸ்: 5.6 பில்லியன் டாலர்
பிளாஸ்டிக் பொருட்கள்: 1.8 பில்லியன் டாலர்
கப்பல் மற்றும் படகுகள்: 1.5 பில்லியன் டாலர்

இந்தியாவில் இருந்து ஒரு வருடத்திற்குச் சீனவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 5 முக்கியப் பொருட்கள் மற்றும் அதன் மதிப்பு.

கனிமங்கள், சாம்பல்: 1.6 பில்லியன் டாலர்
பருத்தி: 1.3 பில்லியன் டாலர்
கெமிக்கல்: 887 மில்லியன் டாலர்
கனிம எரிபொருள்: 789 மில்லியன் டாலர்
செம்பு மற்றும் பொருட்கள்: 708 மில்லியன் டாலர்

வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்றால் முதலில் அமெரிக்கா, சீன நாடுகளுக்கு இணையாகப் பொருட்கள் மற்றும் அதன் தரத்தை ஈடு செய்யும் வகையில் பொருட்களைத் தயாரிக்க வேண்டும். இதில் முக்கியமாக விலை பிற நாட்டுப் பொருட்களை விடவும் குறைவாக இருக்க வேண்டும்.
இதனைச் செய்தாலே சில வருடங்களில் இருந்து இந்தியா தனியாகச் சந்தையில் நிற்கும்.

அதன் பின் தொடர்ந்து உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீனாவைப் போல இந்தியாவும் வல்லரசு நாடு ஆக முடியும். இதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் தான் மேக் இன் இந்தியா. ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பும் இறக்குமதி அளவுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.
on 13/12/2017, 5:37 amPost 1
You cannot reply to topics in this forum