கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ

avatar

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது மிகவும் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. நகரம் மொத்தத்தையும் 6 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சூழந்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதித்து இருக்கிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய காட்டுத் தீ இதுதான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த காட்டுத் தீ இன்னும் அணையாமல் வேறு பரவிக் கொண்டே இருக்கிறது. முதலில் ஒரு காட்டுத் தீ மட்டுமே உருவானதாகவும் தற்போது நிறைய காட்டுத் தீ அந்த பகுதியில் பரவிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கலிபோர்னியாவில் மொத்தம் தற்போது 6 காட்டுத் தீக்கள் உருவாகி இருக்கிறது. எல்லாமே மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் தாமஸ் என்று காட்டுத் தீ தான் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் கலிபோர்னியாவில் இருக்கும் 'வென்சுரா' என்று பகுதியில்தான் இந்த தாமஸ் காட்டுத் தீ உருவானது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சாண்டா பார்பாரா பகுதிக்கு சென்றது. இப்போதுவரை இந்த காட்டுத் தீ 2,50,000 ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்து உள்ளது.

தாமஸ் காட்டுத் தீ குறித்து தற்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் கலிபோர்னியாவில் இந்த மாதம் மட்டும் இதுவரை 10 காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த வருடத்தில் உருவானதிலேயே இதுதான் மிகவும் மோசமான காட்டுத் தீ என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த காட்டுத் தீ அமெரிக்காவின் கால நிலையை ஒருமாதம் வரை மாற்றும் அளவுக்கு சக்தி கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த வருடத்தில் வந்ததில் இதுமட்டுமே இவ்வளவு சக்தி வாய்த்தது.

இந்த காட்டுத் தீ தற்போது இருக்கும் நியூயார்க்கின் அளவை விட அதிகம் ஆகும். இந்த காட்டுத் தீ ஒருவேளை நியூயார்க்கில் மட்டும் ஏற்பட்டு இருந்தால் ஒரே நாளில் அந்த நகரம் அழிந்து போய் இருக்கும். மேலும் தற்போது இதன் புதிய புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் அளவு லண்டன் அளவுக்கு அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினத்தில் இந்த காட்டுத் தீ லண்டனை விட அதிக அளவாகி விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்த தாமஸ் காட்டுத் தீ ஒரே நாளில் மட்டும் 50,000க்கும் அதிகமான ஏக்கர் பகுதிகளை எரித்து நாசம் ஆக்கியுள்ளது. இது சரியாக ஒரு மணிநேரத்திற்கு 50 மீட்டர் வரை பரவுகிறது. இன்று மட்டும் அதிகபட்சமாக 100 மீட்டர்வரை ஒரு மணி நேரத்தில் பயணித்து இருக்கிறது. இதன் காரணமாக தற்போது தெற்கு கலிபோர்னியா மொத்தமாக அளித்துள்ளது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து இது இன்னும் 50 கிலோமீட்டர் தூரத்தில் கூட இல்லை. ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்சுக்கு சொந்தமான பல பகுதிகள் தாமஸ் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து இருக்கலாம் எனப்படுகிறது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!