ஆர்.கே.நகர் தேர்தல்! களையெடுக்க தயாராகும் தி.மு.க...

avatar
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு இவற்றைத் தொடர்ந்து திமுகவில் மிகப் பெரும் களையெடுப்பு நடக்க இருக்கிறதாம்.. இதனால் மாவட்ட செயலாளர்கள் பலரும் 'பிடிக்க வேண்டியவர்களை பிடித்து' 'நடக்க வேண்டியதை' பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அக்கட்சியின் செயல்பாடு என்பது பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கிறது. அறிக்கைகள், பேட்டிகள், அவ்வப்போது ஆர்ப்பாட்டம், பேரணி என்கிற வகையில்தான் ஒரு கட்சியாக மட்டுமே திமுக இயங்குகிறது.

ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுக இரண்டாக பிளவுபட்ட சூழலில், அக்கட்சியின் இரட்டை இலை சின்னமே இல்லாது இருந்ததை என எத்தனையோ அம்சங்களை தமக்கு சாதகமாக்க திமுக தவறிவிட்டது என்பதுதான் அக்கட்சி தொண்டர்களின் குமுறல். இது பொதுமக்களின் குமுறலும் கூட என்பதை திமுக செயல் தலைவர் ஸ்டாலினே பல கூட்டங்களில் பதிவு செய்திருக்கிறார்.

இருந்தாலும் கூட பெரிய அளவுக்கு திமுக ஆக்டிவ்வாக இல்லை என்பதுதான் யதார்த்தம். இந்த நிலையில் திமுகவின் 2-ம் கட்ட தலைவர்களாக இருப்பவர்கள் பலரும் தொழிலதிபர்களாக, கல்வி வள்ளல்களாக, வழக்குகளில் சிக்கியவர்களாக இருப்பதால் மத்தியில் ஆளும் பாஜகவுடன் கட்சி தலைமையை இணக்கமாக்குவதிலும் தீவிரமாக உள்ளனர். தமிழகத்தின் கள சூழல் டெல்லிக்கு எதிராக இருப்பதைப் பற்றியெல்லாம் இந்த 2-ம் கட்ட பெரிசுகள் கவலைப்படவில்லை.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் திமுகவுக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கப் போகிறது. அதே நாளில் வெளிவர இருக்கும் ஸ்பெக்ட்ரம் தீர்ப்பும் திமுகவில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஸ்பெக்ட்ரம் தீர்ப்பில் எப்படியும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்கிற பெரும் நம்பிக்கையில் கருணாநிதி குடும்பத்தினர் இருக்கின்றனர். அப்படி தீர்ப்பு வந்த உடன் அதை அங்கீகரிக்கும் வகையில் கட்சியில் "படு பசையான" பதவியை வாங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தையைக் கூட தொடங்கிவிட்டார்களாம்.

ஆனால் கிச்சன் கேபினட் தரப்போ, அவங்களுக்குன்னே ஒதுக்கப்பட்ட து.பொ.செ. பதவி இருக்குல்ல.. அதையே வாங்கிவிட்டு போகட்டும் என்கின்றனராம். இப்படி ஒருவருக்கு மட்டும் பதவி கொடுக்காமல் ஒட்டுமொத்தமாக திமுகவில் பெரும் களையெடுப்பையே செய்துவிடலாமா என்றும் கூட தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறதாம். இதனால் பதவியை பறிப்பார்களோ என அச்சப்படும் மாவட்ட செயலாளர்கள் பார்க்க வேண்டியவர்களை பார்த்து நடக்க வேண்டியதை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!