ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.40,000 வரை வாரி இறைக்கும் கட்சிகள்!

avatar
சென்னை: ஆர்.கே.நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் அதிகபட்சமாக ரூ.40,000 வரை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கிறார்களாம். காரணம், இடைத் தேர்தல்.
ஜெயலலிதா மறைவால் காலியான, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்சை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

இதனிடையே ஆர்.கே.நகரில் சில வேட்பாளர்கள் பணத்தை தண்ணீராய் செலவிட்டு வருகிறார்கள். கடந்த கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஆர்.கே. தொகுதியில் மீண்டும் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளது. பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதை உணர்ந்துதான், தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் நாயரை நியமித்தது.

கடந்த முறை இவர்தான் பணப்பட்டுவாடாவை கண்டுபிடித்து, அதை தடுக்க முடியவில்லை என அறிக்கை அனுப்பினார். இதனால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அதே அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாலும், இம்முறையும் பணப்பட்டுவாடா ஜரூராக நடப்பதாலும் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா செய்யவே சில வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை நியமித்துள்ளார்களாம். தினமும் 100 குடும்பத்திற்கு பணப்பட்டுவாடா செய்தால் ஏஜெண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை கமிஷனாக கொடுக்கப்படுகிறதாம். அதேநேரம், வாக்களர்களை சொல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்களா என ஒரு குழுவினர் தனியாக ஆய்வு செய்கின்றனராம்.

சில வேட்பாளர்கள் அல்லது கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை தரப்படுகிறதாம். சில வேட்பாளர்கள் அல்லது கட்சி சார்பில் ரூ.5000 வரை கொடுக்கப்படுகிறதாம். இதனால் ஆர்.கே.நகரிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை சம்பாதிக்கிறார்கள்.

நிலைமை இதேபோல சென்றால், ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!