வெற்றிகள் தொடரட்டும்.. ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து

avatar

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர் தனது வாழ்த்தில் ரஜினியின் வெற்றிகள் தொடரட்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களும், நடிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
கமல்
— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2017

அவர் தனது டிவிட்டில் ''சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு கீழே கமல் என்று எழுதியுள்ளார். தற்போது கமலின் இந்த டிவிட்டுக்கு இருவரின் ரசிகர்களும் சந்தோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!