பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் நன்றி

avatar

சென்னை: தமக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள், நடிகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ரஜினி ரசிகர்களும் இன்று அமர்க்களாக அவரது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்தார்.

— Rajinikanth (@superstarrajini) December 12, 2017
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் கமல்ல்ஹாசன், அபிஷேக் பச்சான், மோகன்லால், அக்‌ஷய்குமார் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்தித் தாள்கள் மூலமாகவும், சுவரொட்டி விளம்பரங்கள் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்த அனைவருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ட்விட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!