நீதிபதி அலமேலு நடராஜனுக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்!

avatar
சென்னை: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கொலைக்கு காரணமான சின்னசாமிக்கு தூக்கு தண்டனையும், கூலிப்படையை சேர்ந்த 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ள நீதிபதி அலமேலு நடராஜனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தையே உலுக்கிப் போட்ட ஆணவக்கொலை வழக்கான உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி காலை முதலே பரபரப்பான சூழல் நிலவியது. திருப்பூர் வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜனின் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்து காத்திருந்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவக்கொலை செய்ய நினைக்கும் பெற்றோருக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி இலமேலு நடராஜன். முதல் குற்றவாளி சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெயதீசன், 5வதுகுற்றவாளியான மணிகண்டன், 6வது குற்றவாளியான செல்வகுமார், 7வது குற்றவாளியான கலை தமிழ்வாணன், 8வது குற்றவாளியான மதன் உள்ளிட்டோருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வழக்கை முறையாக விசாரித்து சரியான தீர்ப்பளித்துள்ள நீதிபதி அலமேலு நடராஜனுக்கு முகநூல் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிறர் உயிரை நீ எடுத்தால் ....உன்னுயிரை நீதி எடுக்கும் என்ற பயத்தை நீதிமன்றங்கள் நேர்மையோடு சொல்லும்போதுதான் என் தேசம் உயிர்வலி உணரும்

சிலநேரங்களில் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வருகிறது.. மிக்க நன்றி நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களே ஆணவ கொலைகளை தடுக்க அரசு முயற்சிக்கப்பட வேண்டும் . வாய்மையே_வெல்லும்

கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 ஆறு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி அலமேலு நடராஜன்.. மரண தண்டனை சரி தப்பு என்பதையெல்லாம் தாண்டி இது சாதியை தூக்கி பிடிப்பவர்களுக்கு ஒரு பாடம்.. அவங்க ஆணவத்துக்கு கிடைத்த பரிசு.. ஆணவப் படுகொலைகள் இனியாவது குறையட்டும். தீண்டாமை ஒழியட்டும்.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தீர்ப்பு கூறிய மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர் இது போன்று கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக இருந்த நீதிபதி அசோகனும் பல வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களுக்கு நன்றி. தூக்கு தண்டனை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் கூட இது போன்ற சம்பவத்திற்கு தகுந்த தீர்ப்பு தான்.

என்று பதிவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!