நாட்டையே உலுக்கிய வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது!

avatar
திருப்பூர்: கடந்த 2015ம் ஆண்டு கல்லூரி மாணவியான கவுசல்யா, தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சங்கரை நடுரோட்டில் வைத்து வெட்டினர்.

இந்தக் கொடூர தாக்குதலில் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவுசல்யா ஆபத்தான கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்தார்.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார். கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு 2 மரண தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல், 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!